Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜயவாடா, விசாகப்பட்டினத்தில் 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த ‘இந்தியன்- 2’படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவுபெற்றுள்ளது. மேலும், இன்று முதல் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Indian 2 movie latest update viral
Indian 2 movie latest update viral