Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நிக்சன் குறித்து கமல்ஹாசன் பேசாதது ஏன்? வினுஷா வருத்தம்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி பேசிய பேச்சுக்கு விளக்கம் கொடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் நிக்சன் வினுஷா பற்றி பேசிய விஷயத்திற்கு அவர் கொடுத்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை.

வினுஷா இது குறித்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்த நிலையில் கமல்ஹாசன் நேற்றைய எபிசோட்டில் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது தனக்கு வருத்தம் அளிப்பதாக பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன் நிச்சயம் இது குறித்து பேசி இருக்க வேண்டும் என ரசிகர்களும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Vinusha Disappointed With Bigg Boss 7 Tamil
Vinusha Disappointed With Bigg Boss 7 Tamil