தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் லியோ படம் வெளியான பிறகு படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
அதே சமயம் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற நாயகி தேடுதல் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார், இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார் என பல தகவல்கள் வெளியான நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அதாவது இந்த படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
குஷி மற்றும் திருமலை படத்தில் இணைந்து நடித்த இவர்கள் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர இருப்பதாக வெளியான தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்தால் எப்படி இருக்கும் என்பதை நீங்க கமெண்ட்டில் சொல்லுங்க.


