Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்த சூர்யா மற்றும் கார்த்தி.வைரல் வீடியோ

Suriya & Karthi visited Ajith Kumar house

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் சோகத்தில் இருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் மற்றும் சிம்புவை தொடர்ந்து  நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி நடிகர் கார்த்தி இருவரும் இணைந்து அஜித்தின் வீட்டிற்கு சென்று தங்களது இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ