Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உடல் நல குறைபாடு காரணமாக இயக்குனர் TP கஜேந்திரன் காலமானார். இரங்கல் தெரிவிக்கும் திரையுலகப் பிரபலங்கள்

actor tp-gajendhiran-passes-away

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்தவர் டிபி கஜேந்திரன். வீடு மனைவி மக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 15 படங்கள் வரை இயக்கி உள்ளார்.

அதேபோல் சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி கிட்டத்தட்ட ஐம்பது படங்கள் வரை நடித்துள்ளார். இயக்கம் நடிப்பு என இரண்டிலும் திறமையான கலைஞராக வலம் வந்தார்.

68 வயதாகும் இவர் இன்று உடல் நலக் குறைபாடு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

actor tp-gajendhiran-passes-away
actor tp-gajendhiran-passes-away