Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாராவின் கனெக்ட் படத்தை இணையதளங்களில் வெளியிடுவதில் வந்த சிக்கல்

tamil-cinema-ban-on-publishing-nayantharas-connect-film-on-websites viral

நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ‘கனெக்ட்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். கனெக்ட் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை 2634 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்கக் கோரி விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கனெக்ட் இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, “நேற்று திரைக்கு வந்த ‘கனெக்ட்’ திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் திரைத்துறையினரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் சட்டவிரோத வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். கனெக்ட் இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘கனெக்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக 2634 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

tamil-cinema-ban-on-publishing-nayantharas-connect-film-on-websites viral
tamil-cinema-ban-on-publishing-nayantharas-connect-film-on-websites viral