Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் போஸ்டர் குறித்து விஜய் போட்ட கண்டிஷன்.என்ன தெரியுமா?

Thalapathy Vijay Order on Varisu Movie Banner

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் பொங்கலுக்கு நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளனர்.

அஜித் நடிப்பில் துணிவு, தளபதி விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஜித்தின் துணிவு படத்துக்காக பெரிய பேனர் ஒன்று திரையரங்கு ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

இதனை பார்த்த தளபதி விஜய் உடனடியாக சத்யம் திரையரங்கில் வாரிசு படத்துக்கு மிகப்பெரிய பேனர் வைக்க உத்தரவு விட்டதாகவும் அதற்கேற்ப அங்கு பெரிய பேனர் வைக்கப்பட்டதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay Order on Varisu Movie Banner
Thalapathy Vijay Order on Varisu Movie Banner