Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தங்கைக்கு பாசமான அட்வைஸ் கொடுத்த ஜான்வி கபூர்..

janhvi-kapoor-advice-to-her-sister gone-viral

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தின் இந்தி ரீமேக் காண குட் லக் ஜெர்ரி என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவரது தந்தையான போனிகபூர் தமிழில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் அஜித்தின் துணிவு திரைப்படத்தையும் தற்போது தயாரிப்பு வருகிறார்.

இதற்கிடையில் ஜான்வி கபூரின் தங்கையான குஷிகபூரும் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் ஜான்வி கபூரிடம் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுக்க இருக்கும் உங்கள் தங்கை குஷிக்கு என்ன அட்வைஸ் கொடுக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை பேட்டியாளர்கள் எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்து ஜான்வி கபூர், “நடிகரை மட்டும் காதலிக்க கூடாது என்று சொல்லுவேன். அத்துடன் முதலில் உன்னுடைய மதிப்பு என்ன என்பதை தெரிந்துகொள். அதுவே உன்னை வழிநடத்தும். நடிகை என வந்துபின் பல பேர் விமர்சனம் செய்யலாம். அதனை கண்டுக்கொள்ளக்கூடாது என அட்வைஸ் சொல்வேன்” என்று கூறியிருக்கிறார். இவரது இந்த பாசமான அட்வைஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

  janhvi-kapoor-advice-to-her-sister gone-viral

janhvi-kapoor-advice-to-her-sister gone-viral