Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மிகப் பிரமாண்டமாக நடக்கும் மார்க் ஆண்டனி படத்தின் சூட்டிங்..! ரிலீஸ் எப்போது தெரியுமா

Mark Antony movie Release Date Update

தென்னிந்திய சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என்னை பன்முக திறமைகளுடன் வலம் வரும் விஷால் இவர் நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார். இதற்கு முன்னதாக தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவரது நடிப்பில் அடுத்ததாக லத்தி மற்றும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் மார்க் ஆண்டனி படம் குறித்த தகவல்கள் சில சுவாரசிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் அவர்களின் மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நேற்று 1000 பேர் மற்றும் 100 டான்சர்களுடன் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த படத்தினை 2023-ம் ஆண்டு வெளியிட தீவிர முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் ரித்து வர்மா நாயகியாக நடிக்க விஷாலுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார். இவருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Mark Antony movie Release Date Update
Mark Antony movie Release Date Update