Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கைதி 2 குறித்து தரமான அப்டேட் கொடுத்த கார்த்தி.. எதிர்பார்ப்பில் கார்த்தி சூர்யா ரசிகர்கள்

suriya-and-karthi-in-kaithi-2 movie

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மாநகரம். இந்த படத்தை தொடர்ந்து கைதி என்ற படத்தை இயக்கிய நிலையில் அடுத்ததாக விக்ரம், மாஸ்டர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்தார்.

500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை அடிக்க விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் நடிகர் கார்த்தி இந்த படத்தில் டெல்லி என்ற கதாபாத்திரத்தில் அவருடைய குரலை மட்டும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி இந்த படம் குறித்தும் கைதி 2 குறித்தும் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது விக்ரம் படத்தில் என்னையும் டெல்லி கதாபாத்திரத்தில் நடிக்க லோகேஷ் அழைத்தார். ஆனால் அப்போது புலியின் செல்வன் படத்தில் நீண்ட முடியுடன் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த படத்தில் முடியை எடுத்துவிட்டு நடிக்க முடியாது என கூறி விட்டேன். அதற்காகத்தான் குரலை மட்டும் கொடுத்தேன்.

2023 ஆம் ஆண்டில் கைதி 2 திரைப்படம் வெளியாகும். இந்த படத்தில் அண்ணாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் இடம் பெற உள்ளது அதனால் கைதி 2 படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளேன் என்ன சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார் கார்த்தி. இது சூர்யா மற்றும் கார்த்திக் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

 suriya-and-karthi-in-kaithi-2 movie

suriya-and-karthi-in-kaithi-2 movie