Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீனாவில் வெளியிட்ட சூர்யாவின் ஜெய்பீம்.. கண் கலங்கிய சீனா ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ

chinese audience feel about jai bhim movie update

இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான் ஜெய் பீம். இப்படமானது 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படமாகும்.

இப்படத்தினை நடிகர் சூர்யா தனது ‘2டி என்டேர்டைன்மெண்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் 2021 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2ல் ‘அமேசான் பிரைம் வீடியோ’ என்கின்ற ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை தற்போது சீனாவிலும் வெளியிட்டுள்ளனர். அப்படத்தைப் பார்த்த சீனா மொழி ரசிகர்கள் திரையரங்கில் கண் கலங்கி உள்ளனர். மேலும் இப்படம் குறித்த கருத்துக்களையும் தெரிவித்து இருக்கின்றனர். அந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.