தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் படத்தின் கதைக்களம் குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது இந்த படம் தாதா கதையாக உருவாக இருப்பதாகவும் படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


