3 years later Kali Yugam starring Shraddha
இவன் தந்திரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற வெற்றிப் படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். கடைசியாக ‘விட்னஸ்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்த அவர், மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது ‘கலியுகம்’ படத்தின் மூலம் மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.
இந்த முறை அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘கலியுகம்’, ஒரு போஸ்ட் அபோகலிப்டிக் சைக்காலஜிகல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆர் கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
‘கலியுகம்’ படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் ஆடுகளம் கிஷோர், இனியன் சுப்ரமணி, அஜ்மல், ஹரி, மிதுன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவையும் தயாரிப்பாளர் கே.ராம்சரண் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் மே மாதம் 9-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் குறித்து பேசிய இயக்குநர் பிரமோத் சுந்தர், இது ஒரு கற்பனையான, பேரழிவுக்குப் பிந்தைய எதிர்கால உலகத்தில் நடக்கும் கதை என்றார். ஒழுக்கமும் அன்பும் சிதைந்து போன ஒரு கொடிய உலகில், மனிதர்கள் உயிர் பிழைக்கப் போராடும் உணர்ச்சிகரமான உளவியல் மோதல்களை இப்படம் சித்தரிக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும், இந்த முற்றிலும் புதிய களத்தில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தை அளிக்கும் என்றும், அவர்களை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் மீண்டும் கதாநாயகியாக களமிறங்குவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…