Categories: Spiritual

வாஸ்து தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா?

வீட்டில் எப்போதும் பிரச்சனையாக இருப்பதற்கு காரணம் வீட்டின் வாஸ்துதோஷமாக இருக்கலாம். அதற்குரிய எளிய பரிகாரம் செய்து பலன் பெறுங்கள். பூஜைகளின் மூலம் வாஸ்து தோஷங்களை நீக்கலாம். அதற்காகப் பெரிய சிரமங்கள் எதுவும் படத் தேவையில்லை.

வீட்டில் தினமும் ஊதுவர்த்தி காட்டி சாமி படங்களுக்கு பூஜை செய்து வந்தாலே போதும். வீட்டில் எந்த கெட்ட சக்தியும் அண்டாது. தினமும் காலையில் கிழக்கு நோக்கி தீபமேற்றி, ‘ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை ஜபியுங்கள்.

செவ்வாய், வெள்ளிக் கிழமை மாலையில் வீடு முழுவதும் சாம்பிராணி புகை சூழ, ஓம் என்னும் பிரணவ மந்திரம், கந்தசஷ்டிக் கவசம், சிவபுராணம், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், காயத்ரி மந்திரம் போன்ற ஸ்லோகங்கள் ஒலிப்பது நல்லது.

வீட்டின் வடகிழக்கில் துளசி, நந்தியாவட்டை போன்ற பூச்செடிகள் வளர்க்கலாம். ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் நடத்தினால் நல்லது. வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றலாம்.

தினமும் மாலை நேரங்களில் கட்டாயமாக வீடுகளில் விளக்கேற்றி வைக்க வேண்டும். குறிப்பாக, தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்துக்கு அருகே விளக்கேற்றி வைத்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும்.

 

admin

Recent Posts

‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

2 days ago

“டிரெய்லர் தெறிக்கும்”… ‘கருப்பு’ படம் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…

2 days ago

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

2 days ago

ஆகஸ்டில் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…

2 days ago

“பரோட்டா சூரி மாதிரி கோட்ட அழிக்க வைக்காதீங்க!” – நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…

2 days ago

“நல்லதே நடக்கும்… கான்ஃபிடென்டா இருப்போம்!” – வெங்கட் பிரபுவின் X பதிவு வைரல்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…

3 days ago