actress vani bhojan
தொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நடிப்புக்காக ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். ‘ஓ மை கடவுளே’ படத்தில் அவருடைய கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வாணி போஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘சினிமாவுக்கு வந்ததுமே 5 படங்கள் நடிக்கிறேன். அடுத்து வைபவ்வுடன் ‘லாக்கப்’, விதார்த்துடன் ஒரு படம் வெளியாகவுள்ளது.
சினிமாவில் எனக்கான வரவேற்பு நன்றாக உள்ளது. ஏராளமான பட வாய்ப்பு வருகிறது. அதில் சில பயோபிக் கதைகள் கூட வந்தது. பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். அதனால் அவசரம் காண்பிக்காமல் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறேன்.
காதல் அனுபவம் பற்றி கேட்கிறார்கள். சின்ன வயதில் ‘லவ் யூ’ சொன்ன பசங்க நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லாமே அறியாத பருவத்தில் நடந்தவை என்பதால் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. காதலர் தினமும் கொண்டாடியதில்லை. ஆனால் இந்த காதலர் தினம் எனக்கு ஸ்பெஷல். ஏனெனில், நான் நடித்த ‘ஓ மை கடவுளே’ ரிலீசாகியுள்ளது.
இந்த வருடம்தான் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ளேன். அதனால் 2020 காதலர் தினத்தை வாழ்க்கையில் மறக்கமாட்டேன். எனது சினிமா பயணத்தில் என் பெற்றோர் குறுக்கீடு செய்வதில்லை. நாம் சரியான முடிவுகளை எடுத்தால், அவங்க நிச்சயம் சந்தோஷப்படுவாங்க. அவங்களை பெருமைப்படுத்தும் விதமாகவே நான் நடந்து கொள்வேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…