Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ படத்தில் இடம்பெற்ற “உள்ளே போ” என்ற வசனத்தின் பெயரில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் வெளிவந்துள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த பாடலை பற்றி இசையமைப்பாளர் தாஜ்நூர் கூறும்போது,
கொரோனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் எண்ணத்தில் பாடல் ஒன்றை தயார் செய்யலாம் என முடிவு செய்தேன்.
முதல் வார்த்தை அனைவருக்கும் பழகிய ஒரு வார்த்தையாக இருக்க வேண்டும் எனவும், கொரோனாவினால் சோர்ந்து போய் இருப்பவர்களை உற்சாக மூட்டும் வகையில் இருக்க வேண்டும் எனவும் திட்டமிட்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘பாட்ஷா’ படத்தில் இடம்பெற்ற “உள்ளே போ”என்ற பன்ச் டயலாக்கை முதல் வார்த்தையாக வைத்து உருவாக்கலாம் எனும் முடிவுக்கு வந்தேன்.
அதன்படி முதல் மூன்று வரிகளை நானே எழுதி விட்டு கவிஞர் பா. இனியவன் அவர்களை தொடர்பு கொண்டு இந்த பாடலை முழுமையாக எழுதி தர கேட்டு கொண்டேன். அவரும் அன்றே பாடலை எழுதி கொடுத்து விட்டார்.
பாடகர்கள் வேல்முருகன், தீபக் மற்றும் ஷிவானி ஆகியோர் பாடலைப் பாடினர். பெண் ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு அவர்கள் பாடலுக்கு நடனமாடியுள்ளார். கமலக்கண்ணன் எடிட்டிங் செய்திருக்கிறார்” என்றார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja
Muyantrey Vizhuvom Lyrical Video | Thadai Athai Udai | Mahesh | Guna Babu | Arivazhakan…
Mylanji Teaser | Isaignani Ilaiyaraaja | Sriram Karthick, Krisha Kurup, Munishkhanth | Ajayan Bala