அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் – வசந்த் ரவி

தரமணி படத்திற்குப் பிறகு ராக்கி படத்தில் நடிக்கிறார் வசந்த் ரவி. இவர் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ்ஐ சந்தித்து கொரோனா நெருக்கடியின் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் நலனுக்காக உழைக்கும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் 1000 சுகாதார கருவிகளை வழங்கினார்.

வசந்த் ரவி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி பேசியதாவது, இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறி விட்டது. இது நல்லதா கெட்டதா என்பது தெரியாது புரியாது. ஆனால் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். முக்கியமாக பாதுகாப்பாக இருப்போம்.

பல்வேறு துறைகளை சார்ந்த மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இதைப் பார்க்கும்போது இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனால், சென்ற வாரம் நான் மளிகை கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அந்த பாதையில் தூய்மை பணியாளர்கள், முகமூடி மற்றும் கையுறைகள் இல்லாமல் இருந்தார்கள். அதைப் பார்க்கும் போது நான் மிகவும் வருந்தினேன்.

இதுபோன்று நெருக்கடியான நேரத்தில் நமக்காக நமது தெருவை சுத்தமாக வைத்திருக்கும் இந்தத் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி பணியாற்றுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு உரிய சுகாதார கருவிகளை சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் வழங்கினேன். இதுபோல், உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த கருவிகளை வழங்குங்கள் என்றார்.

vasanth ravi
Suresh

Recent Posts

பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் மெகா கூட்டணி: வசூலை வாரிக்குவித்த தந்தை-மகன்!

இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…

12 hours ago

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…

12 hours ago

கோலிவுட்டில் புதிய வாரிசின் வருகை? தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…

13 hours ago

மக்களை ஏளனமா நினைக்கல… மன்னிப்பு கேட்ட நடிகர் மகேந்திரன்

சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…

13 hours ago

டபுள் ஆக்குபன்ஸி திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…

13 hours ago

சாருகேசி திரைப்பட விமர்சனம்

புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…

13 hours ago