ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்து வெளியான ‘எல்.கே.ஜி’ படம், பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதை, திரைக்கதையை தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார் ஆர்ஜே பாலாஜி. இந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம், அடுத்த படத்தையும் தங்களுக்கே செய்யுமாறு அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது.
எனவே, புதிய படத்துக்கான கதையையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து எழுதிய ஆர்ஜே பாலாஜி, அதில் அவரே நாயகனாக நடித்து, இயக்கி வருகிறார். அவரோடு இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பை கவனிக்கிறார். இவர்கள் இருவருமே ‘எல்.கே.ஜி.’ படத்தில் முதல்நிலை உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள்.
‘மூக்குத்தி அம்மன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்துஜா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகர்கோவிலில் நடந்த படப்பிடிப்பில் நடித்த இந்துஜா தனக்கான காட்சிகளில் நடித்து முடித்து சென்னை திரும்பியுள்ளார்.
நயன்தாராவும் இந்துஜாவும் ஏற்கெனவே ‘பிகில்’ படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…