Categories: Spiritual

தெய்வ வழிபாட்டின்போது செய்யக்கூடாத சில செயல்கள்!!

ஆன்மீகப்படி நாம் தெய்வ வழிப்பாட்டில் ஈடுபடும் போது செய்ய வேண்டிய செயல்கள் இருப்பது போல செய்ய கூடாத செயல்களும் இருக்கின்றது.

ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக் கூடாது. இடது கையை கீழேவைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக் கொள்ளவேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்கக்கூடாது.

பெற்ற விபூதி குங்கும பிரசாத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும். பிரதான மூர்த்திகளை மட்டுமின்றி பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சந்நிதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபமேற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.

அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை மரிக்கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூவகைகளால் பூஜிப்பது நல்லது. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானவை.

அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய்துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.

பரிகாரம் செய்தபின் பூஜைப் பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.

ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும்; சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். பூஜை செய்த பொருட்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்துவிடக்கூடாது.

 

admin

Recent Posts

47 வயதில் முதல் ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்திய நடிகை ஜோதிகா!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…

1 hour ago

“ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்!” – தமன்னா வேதனை

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…

1 hour ago

“இந்தக் காலத்தில் ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடியவில்லை!” – ராதிகா சரத்குமார்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…

1 hour ago

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்!” – மன்சூர் அலிகான்

‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒன்…

1 hour ago

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த பழம்பெரும் நடிகை…

2 hours ago

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

2 days ago