தனுஷ் இயக்கத்தில் கண்டிப்பாக நடிப்பேன் – பிரபல நடிகை

மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்தவர் அதிதி ராவ். மீண்டும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சைக்கோ படத்தில் நடித்த அதிதி அடுத்து விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு தனுஷ் நடித்து இயக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 2 வருடம் ஆகியும் அப்படம் அறிவிப்போடு நிற்கிறது. அடுத்தடுத்து அசுரன், பட்டாஸ் படங்களில் நடித்த தனுஷ், தற்போது சுருளி, கர்ணன் என படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனால் ஏற்கனவே அவரது இயக்கத்தில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட படம் இப்போதைக்கு தொடங்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து அதிதிராவ் கூறும்போது, ‘தனுஷ் இயக்கத்தில் நடிப்பேன். அது கண்டிப்பாக நடக்கும். எனது உள்ளுணர்வு சொல்வது எப்போதுமே சரியாக இருக்கும். தனுஷ் ஹீரோவாக நடிப்பதுடன் அவரே இயக்குனராக இருக்கிறார் என்பதையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல மற்றவர்களிடமிருந்து நல்ல நடிப்பையும் வெளிக்கொண்டு வரும் திறமையும் அவருக்கு இருக்கிறது. இவ்வாறு அதிதி ராவ் கூறி உள்ளார்.

Dhanush and Aditi Rao Hydari
Suresh

Recent Posts

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

11 minutes ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

16 minutes ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

20 minutes ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

21 hours ago

Gadi Mela Dheko Lyric Video

Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…

21 hours ago

Muttayi Vandi Lyrical Video

Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

21 hours ago