rajini and chiranjeevi
கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சமைப்பது, வீட்டு வேலை செய்வது என நேரத்தை செலவிடும் பிரபலங்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
அந்த வகையில், தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கினார். பிரபலங்கள் வீட்டு வேலை செய்வதை வீடியோவாக எடுத்து #BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியிருந்தார். அவரின் சவாலை ஏற்று ராஜமவுலி இந்த சவாலை செய்தார்.
பின்னர் ராஜமவுலியின் சவாலை ஏற்று வீட்டுவேலை செய்த ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவிக்கு சவால்விட்டார். இதனை ஏற்று வீட்டை சுத்தம் செய்தது மட்டுமில்லாமல், தனது தாயாருக்கு தோசை சுட்டு கொடுத்து அசத்தினார் சிரஞ்சீவி. இதுபோன்று செய்து வீடியோ பதிவிடுமாறு அவர் ரஜினிகாந்திற்கு சவால் விட்டுள்ளார். சிரஞ்சீவியின் சவாலை ரஜினி ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…
Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas
Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…