சினிமா தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் போட்ட சல்மான்கான்

கொரோனா ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. இந்தி நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.என்.திவாரி கூறும்போது, “எங்கள் அமைப்பில் மொத்தம் 5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கஷ்டத்தில் உள்ள 25 ஆயிரம் பேருக்கு உதவுவதாக சல்மான்கான் கூறி இருக்கிறார்” என்றார்.

அதன்படி முதல் கட்டமாக தான் நடித்து வந்த ‘ராதே’ படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவி வழங்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். இதில் திஷா பதானி நாயகியாக வருகிறார். ஷாக்கி ஷெராப், பரத் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த படத்தில் பணியாற்றிய லைட்பாய், அரங்கு அமைத்தவர்கள், கேமராமேன், உதவியாளர்கள், டிரைவர்கள், சமையல் தொழிலாளர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் சல்மான்கான் பணம் போட்டுள்ளார்.

Suresh

Recent Posts

கையில் வழங்கப்பட்ட சான்றிதழ்… நினைத்ததை செய்துமுடித்த பார்த்திபன்..!

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் திகழும் பார்த்திபன், தனது சிந்தனைகளாலும் செயல்களாலும் அடிக்கடி கவனம் ஈர்த்துவருபவர்.…

17 hours ago

‘என்னைக்கும் குறையாத மவுசு’ – 10 கோடி பார்வைகளை கடந்த ‘கூலி’ பவர்ஹவுஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில்…

17 hours ago

‘TN 2026’ – நாளை OTT-யில் வெளியீடு!

2026 தமிழ்நாடு தேர்தல் களத்தை பின்னணியாகக் கொண்டு உருவான நகைச்சுவை திரைப்படம் ‘டிஎன் 2026’. இந்த படம் கடந்த 14-ம்…

17 hours ago

‘மனிதன் தெய்வமாகலாம்’ – OTT வெளியீட்டு அப்டேட்!

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், நடிகர் செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. விஜயா சதீஷ்…

17 hours ago

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம்-3’ – இன்று மாலை வெளியாகிறது டீசர்!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. அதன் வெற்றியைத் தொடர்ந்து…

17 hours ago

Polladha Aasaigal Lyric Video

Polladha Aasaigal Lyric Video | 29 | Sean Roldan | Vidhu, Preethi Asrani | Rathna…

2 days ago