‘Coolie’ Powerhouse Crosses 100 Million Views!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ராஷிதா ராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், ஆமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. உலகளவில் முதல் நாளிலேயே ரூ.151 கோடி வசூலித்த இப்படம், முதல் வாரத்தில் ரூ.229.65 கோடியை எட்டி பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை புரிந்தது.
இந்நிலையில், இப்படத்தின் ‘பவர்ஹவுஸ்’ பாடல் இணையத்தில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்த சாதனை, ரசிகர்களிடையே பாடலுக்கு கிடைத்திருக்கும் பிரம்மாண்ட வரவேற்பை வெளிப்படுத்துகிறது.
முன்னதாக, ‘மோனிகா பெலூசி’ பாடலும் 10 கோடி பார்வைகளை கடந்த நிலையில், ‘கூலி’ படத்தின் இசை இன்னும் ரசிகர்களிடையே ஹிட் அடித்துக் கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…
பிரபல நடிகைகளான அம்பிகாவும், ராதாவும் உடன்பிறந்த சகோதரிகள். சொத்து மற்றும் பண விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…
Dont Trouble The Trouble Tamil Trailer | Fahadh Fassil, Ssara | Bhairava | SS Rajamouli…