Mohanlal’s ‘Drishyam 3’ – Teaser Releasing This Evening!
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. அதன் வெற்றியைத் தொடர்ந்து உருவான இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்த வெற்றி தொடரின் மூன்றாம் பாகமான ‘த்ரிஷ்யம்-3’ உருவாகியுள்ளது.
முந்தைய பாகங்களைப் போலவே, ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையில் நடைபெறும் பரபரப்பான திருப்பங்களை இந்தப் படம் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் ஆகியோர் தங்களது பழைய கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் நீளம் 2 மணி 39 நிமிடங்கள் (159 நிமிடங்கள்) என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ‘த்ரிஷ்யம்-3’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…