நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடிப்பில் சூரரை போற்று படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது. அதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அடுத்து சூர்யா ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சூர்யா கவுதம் மேனனுக்காக பேசிய வீடியோ ஒன்று திரையிடப்பட்டுள்ளது. அதில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் பற்றி சூர்யா உருக்கமாக பேசியுள்ளார்.
மேலும் “உங்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்கள் சொன்னால் நான் ரெடி” என கூறியுள்ளார் அவர்.
சூர்யா-கவுதம் மேனன் சண்டை போட்டு பிரிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சமரசமாகி மீண்டும் கூட்டணி சேர விரும்புவது ரசிகர்களுக்கு சந்தோசமான செய்தி தான்