உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும் – விஜய் அதகள பேச்சு

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் பேசியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரசிகர்கள் வருகையை தவிர்த்தோம். இந்த விழாவுக்கு என் ரசிகர்கள் வரமுடியாம பட்ற அதே வருத்தம் எனக்கும் இருக்கு. அரை மனசோட தான் இதுக்கு ஒத்துகிட்டேன்.

தமிழ் சினிமால ஒரு தவிர்க்க முடியாத இடத்துல இருப்பவர் விஜய் சேதுபதி. இந்த படத்துல நடிக்க ஏன் ஒத்துக்கிட்டீங்கனு அவர் கிட்ட ஒரு நாள் கேட்டேன். சிரிச்சுட்டே எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும்னு சொல்லிட்டு போயிட்டாரு. ரொம்ப நன்றி நண்பா. விஜய் சேதுபதி பெயர்ல மட்டும் எனக்கு இடம் கொடுக்கல மனசுலையும் இடம் குடுத்துருக்காரு.

லோகேஷ் கனகராஜ், மாநகரம் மூலமா திரும்பி பாக்க வச்சாரு. கைதிய திரும்பி திரும்பி பாக்க வச்சாரு. மாஸ்டர் என்ன பண்ண போறார்னு நானும் காத்திட்டிருக்கேன். நண்பர் அஜித் ஸ்டைல்ல வரலாம்னு தான் இன்னைக்கு கோட் சூட்ல வந்துருக்கேன்னு விஜய் கூறினார்.

இதையடுத்து ஒரு குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், வாழ்க்கை நதி மாதிரி நம்மள வணங்குவாங்க, வரவேற்பாங்க, கல் எறிவாங்க. ஆனா நம்ம கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும் என தெரிவித்தார்.

இப்போ இருக்கிற தளபதி, 20 வருஷத்துக்கு முன் இருந்த இளைய தளபதி கிட்ட எதாவது கேட்கனும்னா என்ன கேப்பீங்கனு தொகுப்பாளர்கள் கேட்க, அதற்கு பதிலளித்த விஜய், ரெய்டுலாம் இல்லாம நிம்மதியா… அப்போ வாழ்ந்த வாழ்க்கை கேட்பேன் என கூறினார்.

மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது. உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும்னு சொல்லி தனது பேச்சை முடித்துக்கொண்டார் விஜய்.

Suresh

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

34 minutes ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

39 minutes ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

42 minutes ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

2 hours ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

2 hours ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

3 hours ago