Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் முடிவுக்கு வரப்போகும் பிரபல ஜீ தமிழ் சீரியல். எந்த சீரியல் தெரியுமா?

zee-tamil-serial-latest-updates viral

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவிக்கு அடுத்தபடியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி சேனலாக ஜீ தமிழ் இருந்து வருகிறது.

தொடர்ந்து விஜய் டிவிக்கு டப் கொடுத்து வரும் இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புது புது சீரியல்களாக தொலைக்காட்சி சேனல் களமிறக்கி வரும் நிலையில் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள இதயம் சீரியல் ப்ரைம் டைம் நேரத்திற்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கும் அளவிற்கு மாறுபட்ட காதல் கதையோடு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கடந்த வாரம் தெய்வம் தந்த பூவே சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மேலும் ஒரு சீரியல் முடிவுக்கு இருப்பதாக ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. ஆமாம் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் முடிவுக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கு பதிலாக புத்தம் புதிய சீரியல் ஒன்று களமிறங்க இருப்பதாகவும் இந்த சீரியலில் சீதாராமன் சீரியலில் இருந்து பாதியில் வெளியேறிய பிரியங்கா நல்காரி என்ட்ரி கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலால் பிரியங்கா நல்காரி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

zee-tamil-serial-latest-updates viral
zee-tamil-serial-latest-updates viral