முடிவுக்கு வந்த சரிகமப.. அடுத்த நிகழ்ச்சியை களத்தில் இறக்கிய ஜீ தமிழ். வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தாண்டி சரிகமப, சரிகமப லிட்டில் சேம்ப்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

கோலாகலமாக தொடங்கிய சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது, இதனை தொடர்ந்து ஜீ தமிழ் அடுத்ததாக டான்ஸ் ஜோடி டான்ஸ் reloaded நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை களமிறக்க உள்ளது.

ஆமாம், வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசனை போலவே இந்த முறையும் ஆர் ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சி கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பக்கா Fun Filled ஷோவாக இருக்கும் என நம்பலாம்.

சாமானிய கலைஞர்களை சாதனையாளர்களாக மாற்றும் இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மெகா ஆடிஷனில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடுவர்களுடன் இணைந்து போட்டியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆடிஷன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 24 போட்டியாளர்கள் இந்த மெகா ஆடிஷனில் பங்கேற்க உள்ளனர். இவர்களில் இருந்து தேர்வு செய்யப்படும் 12 திறமையான போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 12 போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாட போகும் 12 பிரபலங்கள் யார் என்பது குறித்த விவரங்கள் முதல் ரவுண்டான அறிமுக சுற்றின் மூலமாக தெரிய வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Zee Tamil new show Update
jothika lakshu

Recent Posts

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…

11 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

11 hours ago

இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என கேட்ட விஜய் சேதுபதி.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

15 hours ago

விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

18 hours ago

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

20 hours ago

விஜய் சேதுபதியின் பேச்சு.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

20 hours ago