ஜீ தமிழ் புதிய சீரியலில் நடிக்கப் போகும் ரேஷ்மா, வைரலாகும் ப்ரோமோ வீடியோ

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதே சமயம் சேனல் நிர்வாகமும் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் புதுப்புது மாற்றங்களுடன் புத்தம் புதிய சீரியல்களையும் களமிறக்கி வருகிறது, டப்பிங் சீரியல்கள் வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் ஜீ தமிழில் இன்று முதல் நானே வருவேன், லட்சுமி கல்யாணம் என்று இரண்டு டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன.

இதனை தொடர்ந்து வெகுவிரைவில் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது, ரேஷ்மா நாயகியாக நடிக்க நடிகர் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார்.

ப்ரோமோ வீடியோவில் டிராபிக் சிக்னலில் 2 வீலரில் காத்திருக்கும் ரேஷ்மா பக்கத்தில் நிற்கும் கார் கண்ணாடியை பார்த்து நெற்றியில் பொட்டு வைக்க ஜன்னலை ஓபன் செய்த ஜெய் ஆகாஷ் கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இல்லையா? இது என்ன உங்க வீட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள்னு நினைசீங்களா என்று கோபப்படுகிறார்.

உடனே ரேஷ்மா ஹலோ நான் நெத்தியில் தானே பொட்டு வச்சேன், என்னமோ உங்க நெத்தியில் வச்சா மாதிரி பேசுறீங்க என்று பதிலடி கொடுக்க ஜெய் ஆகாஷ் சரியான திமிர் பிடிச்சவளா இருப்பா போல என்று ஆவேசப்படுகிறார். திமிர் பிடிச்சவளா? திமிர் பிடிச்சவ என்ன பண்ணுவா தெரியுமா? என்று கிரீன் சிக்னல் விழுந்ததும் பைக்கை கொண்டு போய் கார் முன்னாடி நிறுத்தி வம்பிழுத்து ஜெய் ஆகாஷ் கீழே இறங்கி வந்ததும் வண்டியை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆகுகிறார்.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடி சூப்பரா இருக்கும் போலயே.. எங்களுடைய சார்மிங் ஜெய் ஆகாஷ் ஐஸ் பேக் என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர், இந்த சீரியலுக்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

Beep Tamil Trailer

Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…

1 hour ago

Arugey Arugey Lyrical Video

Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…

1 hour ago

டி.சி திரைப்பட விமர்சனம்

தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…

1 day ago

டேர் டெவில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…

1 day ago

இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…

1 day ago

சம்பளம் மட்டுமல்ல… செல்வாக்கிலும் கெத்து! இந்தியாவின் டாப் 10 நடிகைகள்!

திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…

1 day ago