Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரமாண்டமாக நடக்க போகும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2023.வைரலாகும் தகவல்

zee-kudumba-viruthugal-2023 update

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தமிழ் சின்னத்திரையை சேர்ந்த தொலைக்காட்சி சேனல்கள் ஒவ்வொரு வருடமும் விருது விழா நடத்தி தாங்காது குடும்பத்தை சேர்ந்த பிரபலங்களை கௌரவிப்பது வழக்கம், அந்த வகையில் ஜீ தமிழ் நிறுவனமும் வருடந்தோறும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் என்ற பெயரில் விழாவை நடத்தி வருகிறது.

இந்த வருட ஆரம்பத்தில் கடந்த வருடத்திற்கான விருது விழா கொண்டாட்டம் நடந்த நிலையில் இந்த வருட சேரியல்களுக்கான விருது விழா கொண்டாட்டம் வருட இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கான ஷூட்டிங் அக்டோபர் அல்லது டிசம்பர் மாத இறுதியில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஜீ தமிழ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர், அவார்டுகளை வெல்ல போகும் பிரபலங்கள் யார்? யார்? எந்தெந்த சீரியலுக்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போதில் இருந்தே மக்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

zee-kudumba-viruthugal-2023 update
zee-kudumba-viruthugal-2023 update