Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“தி கோட்” படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கோட்’ (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் புதுவையில் உள்ள பழமை வாய்ந்த ஏ.எப்.டி. மில்லில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘தி கோட்’ திரைப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, பத்திரிகையாளர்களை சந்தித்த இவர் ‘தி கோட்’ திரைப்படத்தின் அப்டேட் கேட்டதற்கு முதலில் சொல்ல முடியாது என்று சிரித்தபடி சொன்னவர், பிறகு “இந்த முறை தெளிவாக இருக்கேன், இனிமேல் பேச்சு இல்லை வீச்சுதான், நானும் ஆர்வமாகவுள்ளேன், ‘தி கோட்’ திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று வருகிறது” என்றார்.

Yuvan Shankar Raja about the goat movie latest update
Yuvan Shankar Raja about the goat movie latest update