Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இளம் இயக்​குநர்​கள் ஸ்கிரிப்டில் கவனம் செலுத்​துங்​கள்: எடிட்​டர் லெனின் அறி​வுரை

Young directors should focus on the script: Editor Lenin's advice

இளம் இயக்​குநர்​கள் ஸ்கிரிப்டில் கவனம் செலுத்​துங்​கள்: எடிட்​டர் லெனின் அறி​வுரை

ஒளிப்​ப​தி​வாள​ரும் இயக்​குநரு​மான செழியன், ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பயிற்சிப் பட்​டறையை நடத்தி வரு​கிறார். இதில் பயின்ற 34 மாணவர்​கள் ஒன்​றிணைந்து 34 சுயாதீன திரைப்​படங்​களை உருவாக்​கு​கிறார்​கள். இதற்​கான அறி​முக விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

ஒரே நிறு​வனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்​படங்​கள் ஒரே நேரத்​தில் தொடங்​கப்​படு​வது இது​தான் முதன்​முறை. இந்​நிகழ்வில் படத்​தொகுப்​பாளர்​கள் பி.லெனின், ஸ்ரீகர் பிர​சாத், ஒளிப்​ப​தி​வாளர்​கள் பி.சி.ஸ்ரீராம், ரவி வர்​மன், வரைகலை இயக்குநர் ட்ராட்​ஸ்கி மருது, தயாரிப்​பாளர்- விமர்​சகர் தனஞ்ஜெயன், இயக்குநர்​கள் ஞான​ராஜசேகரன், ஹரிஹரன் உள்பட பலர் கலந்து​கொண்​டனர்.

விழா​வில், எடிட்​டர் பி.லெனின் பேசும்​போது, ‘ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்​தால் உலகத்​தில் எங்கு வேண்​டு​மா​னாலும் சென்று பேசி விடலாம். அதற்கு ஆங்​கிலம் தெரிய வேண்​டும் என்ற அவசியமில்​லை. இந்தி தெரிய வேண்​டும் என்ற அவசி​யமில்​லை. தமிழ் தெரிந்​தால் மட்​டும் கூட போதும். இங்கு விருந்தினர்​களுக்கு வழங்​கப்​பட்ட ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவப் படைப்​பாளி​களின் சுய விவர பட்​டியலில் படைப்​புக்​கான பட்​ஜெட் ரூ.50 லட்​சம் தான் அதி​கபட்​ச​மாக குறிப்​பிடப்​பட்​டிருக்​கிறது. அதில் படப்பிடிப்பு நாட்களும் குறிப்​பிடப்​பட்​டிருக்​கிறது.

இப்​போது நாங்​கள் அதைத் தொகுக்​கும் பணி​யில் ஈடுபட்டிருக்கிறோம். அதனை பார்க்கும்போது நாட்​கள் தெரியவில்​லை. முழு நீள திரைப்​படத்​தை​யும் சொன்ன நாட்களுக்குள் படப்​பிடிப்பை நிறைவு செய்து வழங்கி இருக்கிறார்​கள்.

நான் திரைத்​துறை​யில் பணி​யாற்​றத் தொடங்கி இது 61-வது ஆண்​டு. இன்​றும் தொடர்ந்து பணி​யாற்​றிக் கொண்டிருக்​கிறேன். ஸ்கிரிப்ட் தான் முக்​கிய​மானது. திரைக்கதையும் முக்கியம். எனவே இளம் இயக்​குநர்​கள்​ அதில்​ கவனம்​ செலுத்துங்​கள்’ என் கூறியுள்ளார்.

Young directors should focus on the script: Editor Lenin's advice
Young directors should focus on the script: Editor Lenin’s advice