தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் காக்டெய்ல் என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் யோகி பாபு சில மாதங்களுக்கு முன்னர் பார்கவி என்ற பெண்ணை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் தனது திருமண வரவேற்பு விழாவை நடத்த யோகி பாபு முடிவு செய்திருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் முடியாமல் போனது.
இந்நிலையில் தனது பிறந்தநாளை வீட்டில் எளிமையாக கொண்டாடியுள்ளார் யோகி பாபு. இவர் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆனந்தமான பிறந்தநாள் கொண்டாட்டம். வாழ்க யோகி பாபு. இருவரும் ஒரே படத்தில் அறிமுகமானோம். உங்கள் விஸ்வரூப வளர்ச்சி என்னை பிரமிக்கவைக்கிறது.#HBDYogiBabu #YogiBabu #YogibabuBirthdayCDP #HappyBirthdayYogiBabu @iYogiBabu @yogibabu_offl @dir_mkumaran @shan_dir @gvprakash @esakkimuthuk pic.twitter.com/PtJTyciS3g
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) July 22, 2020