தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் யாத்ரா தனுஷின் ப்ளஸ் டூ மதிப்பெண் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
மொழிப்பாடத்தில் நூறுக்கு 98 மதிப்பெண் எடுத்துள்ள யாத்ரா, ஆங்கிலத்தில் 92 மதிப்பெண், கணிதத்தில் 99 மதிப்பெண், இயற்பியலில் 91, வேதியலில் 92, பயாலஜியில் 97 மதிப்பெண்கள் என மொத்தம் 600க்கு 569 மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் பலரும் யாத்ரா தனுஷ்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
