Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ட்ரெண்டிங்கில் இருக்கும் யாத்ரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

yathra-2-movie latest update viral

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’. இந்த படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இதில், ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.யாத்ரா 2 போஸ்டர்இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்பாகம் ஆந்திர முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆரின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது.

இதில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணம் இசையமைக்கிறார்.இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘யாத்ரா -2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் மம்முட்டி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் பிப்ரவரி 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.