yashika aannand with a bandage on her leg
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த தோழிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருந்தார் யாஷிகா. மேலும் தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும், அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. காலில் கட்டுடன் யாஷிகா ஆனந்த் படுத்து இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…