தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் லியோ திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் இதற்கிடையில் அரசியலுக்கான வெளிப்படையான அறிவிப்பு இல்லாவிட்டாலும் அதை நோக்கியே பல செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 234 தொகுதிகளில் இலவச மதிய உணவை வழங்கி வருகிறார்.
இதற்கான அறிவிப்பை அவரது விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதன்படி, விலை இல்லா மதிய உணவினை பல பகுதிகளில் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
THALAPATHY VIJAY "????????❤️
#மக்கள்_பசிபோக்கும்_VMI pic.twitter.com/yQafQnYxGT— #Mᴀʜᴀ❤️Mɪᴛʜʀᴀ™ (@Thalapathi_MAHA) May 28, 2023

