Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாமனிதன் படத்திற்காக திரையரங்குகளில் கூடும் பெண்கள் கூட்டம்

womens-interested-to-see-maamanitan

விஜய் சேதுபதியின் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான “மாமனிதன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி,குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த “மாமனிதன்” திரைப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இருப்பதால் பெண்களின் கூட்டம் திரையரங்குகளில் அதிகமாக காணப்படுகிறது.

womens-interested-to-see-maamanitan
womens-interested-to-see-maamanitan