Will Pradeep Ranganathan's next film have two heroines?
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் 2 கதாநாயகிகளா?
லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்திற்காக பிரதீப்பும் டிராகன் படத்திற்காக அஸ்வினும் ரஜினியிடம் பாராட்டு பெற்றனர்.
பிரதீப் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை அடுத்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் பிரதீப் நடிக்கவுள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இதனையடுத்து இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், அதுபற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மீனாட்சி சவுத்ரி மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூரவ் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் இயக்கவிருக்கும் படத்தின் கதைக்களம் காதலா? க்ரைமா? சயின்ஸா? என்பதும் விரைவில் தெரிய வரும்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…