Will love blossom soon between Bollywood-bound Anupama?
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்?
கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா உள்ளனர். இதில் ராஷ்மிகாவுக்கு வரும் 26-ந்தேதி விஜய தேவரகொண்டாவுடன் காதல் திருமணம் நடைபெறவுள்ளது. அதுபோல அனுபமாவுக்கும் விரைவில் காதல் திருமணம் அரங்கேறுமோ என நெட்டிசன்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
அதாவது தமிழில் கொடி, தள்ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன், லாக்டவுன் உள்பட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். மேலும், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் இப்போது சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இதை ஷான் இயக்குகிறார். பாலிவுட்டில் ரஸ்டம், டாய்லெட்: ஏக் பிரேம் கதா, பேட் மேன் ஆகிய படங்களைத் தயாரித்த பிரேர்னா அரோரா, ஷிவின்நரங், கிரண் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தியில் உருவாகும் இப்படம் மூலம் அனுபமா பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது. பிரேர்னா அரோரா கூறும்போது, ‘அனுபமா பரமேஸ்வரனுடன் இணைவதைச் சிறப்பானதாக உணர்கிறேன். பல மொழிகளில் நடித்து வரும் அவர் திறமையை பாராட்டியுள்ளேன். இந்தப்படம் ஒரு நடிகையாக அவருக்குச் சிறப்பானதாக இருக்கும்’ என கூறியுள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…