சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்துள்ளார். தற்போது ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார்.

சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க முடிய​வில்​லை. இந்​நிலை​யில் 7 வருடங்​களாக, தான் படுத்த படுக்​கை​யாக இருந்த​தாக​வும் 15 நாட்​கள் கோமா​வில் இருந்​த​தாக​வும் தெரிவித்துள்​ளார். ஏழு வருடங்​களுக்கு முன் வீட்​டுக்​குள் ஒரு விபத்தைச் சந்தித்​தார் முமைத் ​கான். அதில் அவர் மூளை​யில் 5 நரம்​பு​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டன. இதனால் அவர் கோமா நிலைக்​குச் சென்​றார். 15 நாட்​கள் நடந்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சுய நினைவு திரும்​பியது.

பின்​னர், அவருக்கு வலிப்பு ஏற்​பட்​ட​தால் படுத்த படுக்​கை​யா​னார். மருத்​து​வர்​கள் குறைந்த பட்​சம் ஏழு வருடங்​களுக்கு எந்த வேலையும் உடற்​ப​யிற்​சி​யும் செய்​யக் கூடாது என்று அறிவுறுத்தினர். அவர் எடுத்​துக் கொண்ட மருந்​துகள் அவரின் உடல் எடையை அதிகரிக்​கச் செய்​தன. இதனால் சினி​மா​வில் இருந்து வில​கி​னார்.

இப்​போது, ஹைத​ரா​பாத்​தில் ‘விலைக்’ என்ற என்ற மேக்​கப் மற்றும் சிகை அலங்​கார பயிற்சி அகாடமியைத் தொடங்கியுள்ளார். இது அவரை வெற்​றிகர​மான தொழிலதிபராக மாற்றி இருக்​கிறது.

இது பற்றி முமைத்கான் கூறும்​போது, ‘நான் 13 வயதிலிருந்தே என் பெற்​றோருக்​காக உழைக்​கத் தொடங்​கி ​விட்​டேன். என் இளமைக்​ காலத்தை உழைப்​பில் செல​வழித்​த​தால், திரு​மணம் பற்றி யோசிக்க நேரமில்​லை. கடவுள் எனக்கு எல்​லா​வற்​றை​யும் கொடுத்​தார், பிறகு அவரே எடுத்​துக்​கொண்​டார். இப்​போது மீண்டும் புதிய பாதையைக் காட்டியிருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

Why did you quit cinema? – Mumtaz Khan explains
dinesh kumar

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago