3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் டப்பிங் குரல் கொடுத்து வருகிறார். மேலும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் நடிகை​யாக அறி​முக​மான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலை​யில், 3 ஆண்​டு​களாகத் தொல்லை அளித்​து​வரும் நபர்களிடம் இருந்து தன்​னை​யும் தனது நண்​பர்​கள், குடும்பத்தினரை​யும் பாது​காக்​கக் கோரி அவர் இன்​ஸ்​டா​வில் வெளி​யிட்​டுள்ள பதிவு பரபரப்பை ஏற்​படுத்​தி ​உள்​ளது.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில், ‘தொடர்ந்து 3 ஆண்​டு​களாகத் தொல்லை அளித்து ​வரும் நபர்களிடம் இருந்து என்​னை​யும் எனது குடும்​பத்​தினரை​யும் பாது​காக்​கவே இதைப் பதி​விடு​கிறேன். போலீஸில் அளித்த புகார்​கள், எச்சரிக்கைகள் இதை நிறுத்​தி​விடும் என்ற நம்பிக்​கை​யில் அமைதியாக இருந்தேன்.

ஆனால், சபரீஷ் என்பவரும் அவரது இரட்டை சகோ​தரரும் என்னை​யும் என் குடும்​பத்​தினரை​யும் நண்பர்​களை​யும் தொடர்ந்து அவதூறாக​வும் ஆபாச​மாக​வும் பேசி வருகிறார்கள். அருவருப்​பான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை மட்டுமல்லாமல், எனக்கு நெருங்​கிய​வர்​களை​யும் இலக்​காக்கி குறுஞ்​ செய்​தி​களை அனுப்பி வரு​கிறார்​கள்.

என்​னால் இந்​தத் தொல்​லைகளைச் சந்திக்க நேர்ந்த நண்பர்​கள் மற்​றும் குடும்​பத்​தினரிடம் மன்னிப்​புக் கேட்​டுக்​ கொள்​கிறேன். நாங்​கள் சட்​டப்​பூர்வ வழிகளை மேற்​கொண்​டோம். ஆனால், தொல்​லைகள் நிற்​க​வில்​லை. அவர் பல வலை​தளக் கணக்குகளைத் தொடங்கி அதன் மூலம் என்​னை​யும் பல நடிகைகளையும் தொடர்ந்து துன்​புறுத்தி வருகிறார். நாங்​கள் பழகிய​தாக​வும் திருமணம் செய்​வ​தாகக் கூறி ஏமாற்றியதாக​வும் பொய்​ கதைகளைப் பதி​விட்டு வரு​கிறார்.

இந்​தி​யா​வில் பெண்​களுக்கு பாது​காப்​பான நகரம் சென்னை என்று சொல்​வார்​கள். அதை நிரூபிக்க, இது​போன்ற விஷமிகளுக்கு எதி​ராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்’ என வேதனை​யுடன் தெரிவித்துள்​ளார்.

People who have been harassing me for 3 years: Actress Raveena Ravi records her anguish
dinesh kumar

Recent Posts

டி.சி திரைப்பட விமர்சனம்

தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…

1 day ago

டேர் டெவில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…

1 day ago

இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…

1 day ago

சம்பளம் மட்டுமல்ல… செல்வாக்கிலும் கெத்து! இந்தியாவின் டாப் 10 நடிகைகள்!

திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…

1 day ago

மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘வாரணாசி’ படத்தின் ‘ருத்ரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…

1 day ago

சென்னையில் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…

1 day ago