சர்க்கரைவள்ளி கிழங்கு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று தெளிவாக பார்க்கலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொதுவாகவே நம் உடலுக்கு சிறந்த ஆரோக்கியம் தரும் உணவாக இருக்கிறது. ஆனால் சில நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முதலாவதாக இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்தும்.
மேலும் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது. இது மட்டும் இல்லாமல் சருமத்தில் பிரச்சனை இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் அதிகமாக வரக்கூடும்.
தலைவலி அடிக்கடி வந்தால் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் வைட்டமின் ஏ அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் தலைவலியை ஏற்படுத்தி விடும்.