பச்சைப்பயிறு சாப்பிடுவது உடல் ஆரோக்கியம் என்றாலும் சிலருக்கு இது தீங்கை விளைவிக்கும்.
பாசிப்பயிறு உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என பலரும் கூறுவார்கள் ஏனெனில் இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாமிரம், வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவை இதில் அதிகமாகவே இருக்கிறது ஆனால் இது சிலருக்கு தீங்கையும் விளைவிக்கிறது.
முதலில் சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் பாசிப்பயிரை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது. ஏனெனில் பாசிப்பருப்பில் அதிக புரதம் இருப்பதால் இது அதிகமாக தீங்கை விளைவிக்கும்.
அடுத்ததாக ரத்தச் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்களும் பாசிப்பருப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் ரத்த சர்க்கரையை குறைக்கும் கனிமங்கள் இருப்பதால் இது இவர்களை அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும்.
இது மட்டும் இன்றி உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இந்த பாசிப்பயிறு சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது.