யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்!

யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்!

சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்பட அறிமுக ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளனர். புரோமோவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் தோன்றுகின்றனர். முந்தைய படங்களில் ப்ரோமோக்கள் போலவே, இப்படத்தின் ப்ரோமோ வீடியோவையும் காமெடி கலந்த ஆக்‌ஷனாக நெல்சன் உருவாக்கியுள்ளார்

ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளில் உள்ளார். அதன்பின்னர், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்தே ரஜினி, கமல் இணையும் படத்தின் பணிகளை நெல்சன் தொடங்கவுள்ளார்.

ப்ரோமோவில், நெல்சனிடம் அனிருத் படத்துக்கு தீம் மியூசிக் போடலாமா?’ என கேட்கிறார். அப்போது கமல் ‘ அதற்கு முன்னாடி ஒன்று கேட்கணும், இந்த படத்துல ஹீரோ யாரு?’ என கேட்கிறார். அருகில் அமர்ந்திருக்கும் ரஜினியும் ‘ ஆமா..ஹீரோ யாரு’ என கேட்க, நெல்சன்-அனிருத் இருவரும் விழிக்கின்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள ப்ரோமோ தற்போது வைரலாக தெறிக்கிறது.

Who is the hero? Rajinikanth, Kamal’s favorite Nelson!
dinesh kumar

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

3 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

3 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

4 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

4 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

4 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

4 days ago