When did you get married to badminton player Jwala Gutta - Description of Vishnu Vishal
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.
அதைத்தொடர்ந்து சில நடிகைகளுடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன. இதனிடையே, பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில், திருமணம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது: ‘‘வாழ்க்கை எப்போதும் ஒரேமாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஏற்றத் தாழ்வு இருக்க தான் செய்யும். ‘பாசிட்டிவ்’ ஆகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. சோதனைகளை தாண்டி போகவேண்டும்.’’ என்று அப்பா சொல்வார்.
அதுதான் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கும், ஜுவாலா கட்டாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. எங்கள் திருமணம் விரைவில் நடைபெறும்.’’ இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.
சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…
திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…
சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கொனிடேலா தம்பதியினர், தங்களது புதிதாக பிறந்த இரட்டைக்…
Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran |…