உடல் எடையை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான். அப்படி உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் மற்றும் உடற்பயிற்சி செய்வார்கள். அப்படி ஆரோக்கியமான முறையில் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க மாவு சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக காய்கறிகள் கீரை ,கேரட் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
இது மட்டும் இல்லாமல் சியா விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள், பாதாம் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
எனவே எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

