Tamilstar
Health

மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? வாங்க பார்க்கலாம்..!

What to do to fix the problem of constipation

மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் உடலின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமான ஒன்று. அதுவும் மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அது அன்றாட வாழ்க்கையை கண்டிப்பாக பாதித்துவிடும். அப்படிப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை எளிமையான முறையில் எப்படி சரி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஓட்ஸ், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சாப்பிடலாம்.

இது மட்டும் இல்லாமல் நடைப்பயிற்சி, யோகா செய்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய முடியும். ஒரு நாளைக்கு எட்டிலிருந்து பத்து கிளாஸ் தண்ணீர் குடிப்பதே மிகவும் நல்லது. நீர்ச்சத்து அதிகமாக குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்கும்.

எனவே எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.