ஆண்களுக்கு வரும் கொலஸ்ட்ராலை குறைக்க சாப்பிட வேண்டிய காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் உடலுக்கு பல்வேறு தீமைகள் வரக்கூடும் இது மட்டுமில்லாமல் கொலஸ்ட்ராலயம் அதிகரிக்கக்கூடும்.அப்படி ஆண்களுக்கு வரும் கொலஸ்ட்ராலை குறைக்க சாப்பிட வேண்டிய காய்கறிகள் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கெட்ட கொழுப்புகளை கரைக்க கீரையை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, இரும்பு சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமில்லாமல் இதயத்திற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.
கிரீன் டீ மற்றும் அவகேடோ சாப்பிடலாம் இதுவும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு கொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.