லோகேஷ்-கார்த்தி கூட்டணியின் கைதி – 2 என்ன ஆனது?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படம் வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து 2-ம் பாகத்துக்கான லீட் உடன் முடிக்கப்பட்டு இருந்தது.
தற்போது லோகேஷ், கார்த்தி இருவரும் தங்களது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் பிஸியாக பணியாற்றும் நிலையில் ‘கைதி 2’ தொடங்கப்படாமல் இருக்கிறது.
இதனிடையில் சமீபத்தில் தனது 7-வது படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளை அவர் தொனங்கினார். இது ‘கைதி’ படத்தின் 2-ம் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த படத்தை லோகேஷ் இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இதனால், ‘கைதி 2’ நிலையென்ன என்பது கேள்விக்குறியானது.
இதனிடையில் ‘வா வாத்தியார்’ புரமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற கார்த்தி ‘கைதி 2’ வரும் என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேச்சால் இப்படம் கைவிடப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ‘கைதி-2′ படத்துக்காக காத்திருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வெளியான’கைதி’ படம் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாமல் ரசிகர களை ஈர்த்தது நினைவுகூரத்தக்கது.
லோகேஷ், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் வாயிலாக ஹீரோவாக களமிறங்குகிறார். வாமிகா கபி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்துக்கு ‘DC’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது.


